அமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதகவும் தமது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா தெரிவித்துள்ளார். கடவுளின் கருணையாலும், மக்களின் வாழ்த்துகளாலும் தாம் விரைவில் நலம்பெறுவேன் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்றிரவு 9 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் பழைய வார்டில் சேர்க்கப்பட்டதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லி எம்பி மகேஷ் கிரி மற்றும் பாரதிஅய் ஜனதா எம்பி மீனாட்சி லேக்கி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அத்துடன் அமித் ஷாவின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உள்ளிட்டோர், அவர் கடவுள் அருளாள் விரைவில் குணமடைவார் என தெரிவித்துள்ளனர்.