பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி : மம்தா பானர்ஜி

பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி : மம்தா பானர்ஜி

பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி : மம்தா பானர்ஜி
Published on

பாரதிய ஜனதா ஒரு பகட்டுச் சொல்லாட்சி கொண்ட கட்சி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் வரும் 30ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி அங்கு பரப்புரையில் ஈடுபட்டார். இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற உலக அமைதி கூட்டத்தில் தன்னை கலந்து கொள்ள அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக அவர் சாடினார்.

பொய்கள் மற்றும் வெறுப்பு மட்டுமே பா.ஜ.கவிடம் உள்ளது என்றும், அந்தக் கட்சிக்கு எதிராகப் பேசுவோர் மீது மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்றும் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com