சச்சின் பைலட்டுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த பாஜக? என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?

சச்சின் பைலட்டுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த பாஜக? என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?

சச்சின் பைலட்டுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த பாஜக? என்ன நடக்கிறது ராஜஸ்தானில்?
Published on

அசோக் கெலாட் மீது ஒழுங்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் போது மறுபக்கம் சச்சின் பைலட்டை தன் பக்கம் கொண்டுவர பாஜக மீண்டும் முயன்று வருகிறது. அதற்காக மறைமுக அழைப்பை விடுத்துள்ளது. 

காங்கிரஸின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் பெரிய நெருக்கடியாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்திலிருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என காங்கிரஸ் தலைமை திட்டம் வைத்திருந்த நிலையில், அசோக் கெலாட்டின் 90 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இதனால் காங்கிரஸ் தலைமைக்குக் கூடுதலாக நெருக்கடிகள் உருவானது. சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக அறிவித்தால் 90 பேரும் ராஜினாமா செய்வோம் என்ற அறிவிப்பின் பின்னணியில் இருப்பது அசோக் கெலாட் தான் எனக் காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதனால், காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அசோக் கெலாட் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மறுபக்கம், ’அசோக் கெலாட் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் முதல்வர் பதவியைத் தொடரக் கூடாது. கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்துக் கொண்டு வருவதும் கெலாட்டின் பொறுப்பு என சச்சின் பைல்ட்’ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சச்சின் பைல்ட்டை பலமுறை தன் பக்கம் கொண்டுவர முயன்ற பாஜக, ‘’ காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் அனைத்தும் அவர்களது உள்கட்சி விவகாரம். அதில் பாஜக தலையிடாது. எனினும், சச்சின் பைலட்டிற்கு பாஜகவில் கதவுகள் திறந்தே உள்ளது’’ என தற்போது தெரிவித்திருப்பது காங்கிரஸின் மூத்த தலைவர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com