Premsinghpt desk
இந்தியா
அருணாச்சலில் பாஜக.. சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது!
அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் தெரிகிறது.
சண்முகப்பிரியா
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில், தற்போது மேலும் 25 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், மற்றவை ஆறு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
BJPpt desk
இதேபோல், 32 இடங்களை உள்ளடக்கிய சிக்கிம் மாநில சட்டப்பேரவையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், அதீத பெரும்பான்மையுடன் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.