2019-20-ல் பாஜகவின் வருவாய் 50% அதிகரிப்பு: புள்ளிவிவரத்தில் தகவல்

2019-20-ல் பாஜகவின் வருவாய் 50% அதிகரிப்பு: புள்ளிவிவரத்தில் தகவல்
2019-20-ல் பாஜகவின் வருவாய் 50% அதிகரிப்பு: புள்ளிவிவரத்தில் தகவல்

பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த 2019-20ஆம் நிதியண்டில் 50 சதவிகிதம் அதிகரித்து 3,623 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2018-19ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் 2,410 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்து வந்த 2019-20ஆம் நிதியாண்டில் 50 சதவிகிதம் உயர்ந்து 3,623 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சமர்ப்பித்த தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 2,555 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் காங்கிரஸ் கட்சியின் வருவாயான 682 கோடி ரூபாயிலிருந்து 5.3 மடங்கு அதிகமாகும். அதேபோல, அந்த ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின் மொத்த வருவாய், 6 தேசியக் கட்சிகளின் மொத்த வருவாயை விட 3 மடங்கிற்கும் மேல் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

அதேநேரம், 2019-20ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் செலவினங்கள் 64 சதவிகிதம் அதிகரித்து 1,651 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com