Prime Minister Modi
Prime Minister ModiTwitter

பிரதமர் மோடியை ஒருமையில் பேசி, அச்சுறுத்திய மகிளா காங்கிரஸார்? - போலீசில் புகாரளித்த பாஜக!

புதுச்சேரியில் பிரதமர் மோடி குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக்பாபு தலைமையில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
Published on

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. பேரணியின் போது மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஒருமையில் பேசி பிரதமரின் தலையை நசுக்கி போடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி சென்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக்பாபு தலைமையில் பெரியக்கடை காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர். அந்த புகார் மனுவில், பிரதமர் மோடி குறித்து ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது பிணையில் வெளிவர முடியாத கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com