2015-16 ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கை சமர்பிக்காத பாஜக, காங்கிரஸ்
இந்தியாவின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது 2015-16 ஆண்டின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் இன்னும் சமர்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தேசியக்கட்சிகள் தங்களது வரவு செலவு கணக்குகளை சமர்பிக்க கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால், பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் கணக்குகளைத் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து 180 நாட்களைத்தாண்டியும் இதுவரை வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.
தேசியக்கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2015-16 ஆம் ஆண்டில் 107 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ்கட்சி 47 கோடி ரூபாய் வருமானமாக காட்டியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கடந்த ஆண்டின் வருவாய் 34 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டு தேசியக்கட்சிகளில் அதிகபட்சமாக பாரதிய ஜனதா 970 கோடி ரூபாய் வருமானமாக காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.