இந்தியா
பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் - தெலங்கானாவில் பதற்றம்
பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் - தெலங்கானாவில் பதற்றம்
தெலங்கானாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸார் - பாஜகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகள் பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தெலங்கானாவின் ஹனம்கொண்டா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தப் போராட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து அங்கு பாஜகவினர் திரண்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.