இமாச்சலப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் தோல்வி அடைந்தார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கியது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. அந்தக் கட்சி 106 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதே போல 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகிக்கிறது. பாஜக 41 இடங்களிலும் காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கிடையே சஞ்சன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போயிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரானா வெற்றிபெற்றார்.