நள்ளிரவு வரை கடும் இழுபறி.. கடைசி நேர ட்விஸ்ட்..16 வாக்குகளில் வெற்றிப்பெற்ற பாஜக வேட்பாளர்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்று ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது.
CK Ramamurthy
CK RamamurthyTWITTER

கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதியில் கடும் இழுபறிக்கு பின் 16 வாக்குகள் வெற்றிப்பெற்றார் பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்று ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களிலும், ஜேடி(எஸ்) 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று ஜெயாநகர் தொகுதியில் மட்டும் கடும் இழுபறியானது. ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

CK Ramamurthy
CK Ramamurthytwitter

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.

தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com