”பள்ளிக்கூடம் கட்டிதரல; ஆனால் கட்சி அலுவலகங்கள கட்டிகிறீங்க” - பாஜகவுக்கு கெஜ்ரிவால் கேள்வி!

கிராமங்களில் பள்ளிகள் கட்டாமல் 30 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று குஜராத் மாநில பாஜகவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
பாஜக மாநில தலைவர், குஜராத்
பாஜக மாநில தலைவர், குஜராத்PT

குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தில் பாஜக கட்சி அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசினார் பாஜகவின் மாநிலத்தலைவர் C.R.படேல்.

NGMPC22 - 147

அப்பொழுது கூட்டத்திலிருந்து எழுந்த அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் கமலேஷ்பாய் என்பவர், “எங்கள் கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிகூடம் கூட இல்லை. ஆனால் நீங்கள் கட்சிக்கு புது அலுவலகம் திறக்கிறீர்கள்” என்று கேட்டதும், பாஜக உறுப்பினர்கள் அவரை வெளியேற்றினர். இந்த வீடியோவானது X பக்கத்தில் வைரலாகிவருகிறது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், “பாஜக கட்சி அலுவகத்தில் இருந்து கிராம தலைவர் வெளியேற்றப்பட்டார் என்பதை கேள்விப்பட்டேன். 5 நட்சத்திர வசதியில் பாஜக கட்சி அலுவலகத்தை கட்டுகிறது. ஆனால் அவர்களால் கிராமங்களில் பள்ளிகளை கட்ட முடியவில்லை. 30 ஆண்டு ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள்? டெல்லியில் நாங்கள் 5 நட்சத்திர வசதியில் பள்ளிகளை கட்டியுள்ளோம். ஆனால் அங்கெல்லாம் எங்களுக்கு ஒரு அலுவலகம் கூட கிடையாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com