குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன்மூலம் பாஜகவின் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித சிரமும் இருக்காது என்று கூறிய அவர், ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னிடம் கோரியதாகவும் தெரிவித்தார். தலித் வாக்குகளைக் கவரவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே நேற்று கருத்து தெரிவித்திருந்தார். மகராஷ்டிர மாநிலத்தில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு குறித்து பல்வேறு கணிப்புகள் வெளியான நிலையில், பாஜக ஆதரவு நிலைப்பாட்டினை சிவசேனா எடுத்துள்ளது.