மரண பயம்: 30 வருடமாக மணமகள் போல் உடை அணியும் கணவர்!

மரண பயம்: 30 வருடமாக மணமகள் போல் உடை அணியும் கணவர்!
மரண பயம்: 30 வருடமாக மணமகள் போல் உடை அணியும் கணவர்!

சவுகானின் இந்த கதை வித்தியாசமாகவும் வினோதமாகவும் தோன்றலாம். ஆனால், இது உண்மை. 

உத்தரபிரதேச மாநிலம் ஜலல்பூர் அருகிலுள்ள ஹவுஸ்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்தாஹரன் சவுஹான் (66). இவருக்குச் சிறுவயதிலேயே திருமணம் நடந்தது. அவர் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பிறகு மேற்கு வங்கத்துக்கு வேலைக்காக சென்றார். அங்கு செங்கல் சூளையில் வேலை பார்த்துவந்த அவருக்கு மளிகை கடைக்காரர் ஒருவர் பழக்கமானார். அவர் மகளை, கடைக்காரர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். 

இதை சவுகானின் குடும்பத்தார் ஏற்கவில்லை. மணமகளை அங்கேயே விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கணவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கவலையில் தற்கொலைச் செய்துகொண்டார் அவர் மனைவி. ஒரு வருடத்துக்குப் பிறகுதான் இது சவுகானுக்குத் தெரியவந்தது. இதனால் கவலை கொண்ட சவுகானுக்கு சில வருடத்துக்குப் பின் வேறொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான சில நாட்களிலேயே நோயில் விழுந்தார் சவுகான். அப்போது அவர் குடும்பத்தில் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். அப்பா, சகோதரர், அண்ணி, அவர்களின் இரண்டு மகன்கள், சவுகானின் இளைய சகோதரர் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். சில மாதங்களுக்கு பிறகு அவர் சகோதரரின் மூன்று மகள்கள், மகன் ஆகியோரும் திடீரென உயிரிழந்தனர்.

இதனால் ஒரு முடிவுக்கு வந்தார் சவுகான். அதை அவரே கூறுகிறார், இப்படி:

‘’ஒரு நாள் என் கனவில், மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி வந்தாள். தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகக் கண்ணீர் விட்டு கதறினாள். அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். ’என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடு. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்றேன். அப்போது, என்னை உன்னுடன் வைத்துகொள்ள, நீ மணமகள் போல உடையணிய வேண்டும்’ என்றார். எப்போதும் அதை அணிந்தே வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டாள். நான் ஏற்றுக்கொண்டேன். அதற்குப் பின் மணமகள் போல உடையும் தோடு, மூக்குத்தி அணிந்தே வெளியே செல்கிறேன். அதில் இருந்து என் குடும்பத்தில் உயிரிழப்பில்லை. என் உடல் நிலையும் நன்றாகத் தேறிவிட்டது’’ என்கிறார் சவுகான்.

இவருக்கு ரமேஷ், தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மனைவியும் சமீபத்தில் இறந்துவிட்டார்.

‘ஆரம்பத்தில் இப்படி மணமகள் போல உடை, நகைகள் அணிந்து செல்லும்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் இதை செய்தேன். பிறகு ஊர்க்காரர்கள் என் மீது இரக்கம் கொண்டார்கள்’ என்கிறார் சவுகான்.

இதை நம்பிக்கை என்பதா? மூட நம்பிக்கை என்பதா? என்கிறார்கள் சிலர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com