கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: முன் ஜாமின் கேட்டார் பிஷப்!
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கேட்டு பிஷப் மனுதாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கன்னியாஸ்திரிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. இந்நிலையில் போலீசார் பிஷப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்து வரும் 19 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் தேவாலய நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து பதவி விலகியுள்ளார்.
பின்னர் கிறிஸ்தவர்களின் மத தலைவரான, வாட்டிகனில் உள்ள போப்பாண்டவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், என் மீதான பாலியல் வன் கொடுமை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராக உள்ளேன். அதனால், தற்காலிகமாக, என் பொறுப்புகளில் இருந்து விலகியிருக்க அனு மதிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண் டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதுபற்றி மதியம் முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.