\
கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப்புக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி!

கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப்புக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி!

கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப்புக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி!
Published on: 

கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் ஃப்ராங்கோ முலக்கல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருந்தார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். ஆனால், தம் மீது வீண் பழி போடப்படுவதாக பிராங்கோ கூறி வருகிறார். இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்தது. 

இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணை குழுவினர் மூன்றாவது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடந்தது. இதையடுத்து இன்று அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com