பாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்

பாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்

பாலியல் புகாருக்குள்ளான பேராயர் தற்காலிக நீக்கம்
Published on

கேரளாவில் பாலியல் புகாருக்குள்ளான பேராயர் பிராங்கோ பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. 

புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். ஆனால், தம் மீது வீண் பழி போடப்படுவதாக பேராயர் பிராங்கோ கூறி வருகிறார். இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், பாலியல் புகாருக்குள்ளான பேராயர் பிராங்கோ பொறுப்பிலிருந்து வாடிகன் நிர்வாகத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தன்னை ஜலந்தர் பேராயர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். 

கடந்த செப்டம்பர் 16ம் தேதி கடிதம் எழுதப்பட்ட நிலையில், பேராயர் பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com