Biryani
Biryanipt desk

இணையம் மூலம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு: மீண்டும் முதலிடம் பிடித்த பிரியாணி

இணையம் மூலம் அதிகம் வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணி இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
Published on

ஸ்விக்கி (SWIGGY) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, 2 விநாடிக்கு 5 பிரியாணி ஸ்விக்கி மூலம் வாங்கப்பட்டுள்ளது. 20 லட்சத்து 49 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் முதல் ஆர்டராக பிரியாணி வாங்கியுள்ளனர். ஸ்விக்கியில் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் பிரியாணி வாங்கப்பட்டுள்ளன. அதிகமுறை ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவாக 8 ஆவது முறையாக இந்த ஆண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

Swiggy
SwiggyTwitter

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது 188 லட்சம் பீட்சாக்கள் வாங்கப்பட்டுள்ளன. துர்கா பூஜையின் போது குலாப் ஜாமூன் மற்றும் ரசகுல்லா மட்டும் 77 லட்சம் ஆர்டர்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளன.

மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு நடப்பாண்டில் மட்டும் உணவினை இணையம் மூலம் வாங்கியுள்ளார். சென்னையை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 31 ஆயிரத்து 748 ரூபாய்க்கு ஒரே ஆர்டரில் காஃபி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வாங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com