இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிய போது எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் இன்னிசைத் துடிப்பை தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை என இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தன்னிகரில்லா இளையராஜாவுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்மவிபூஷண் விருதை வழங்கியதை தாம் பெற்ற பெரும் பேராக கருதுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.