\
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு
Published on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் MI 17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு டெல்லியில் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் டிசம்பர் 10ஆம் தேதி காலை 11 முதல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு பிபின் ராவத் உடல் வைக்கப்படவுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு, அவர்களின் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com