\
முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் ?

முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் ?

முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் ?
Published on

முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் ஆலோசகராக தலைமை தளபதி செயல்படுவார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com