மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா

மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா
மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா

பிப்ரவரி 12-ஆம் தேதி நடைதிறக்கும்போது மீண்டும் சபரிமலைக்கு செல்ல உள்ளதாக பிந்து மற்றும் கனக துர்கா தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. அதேசமயம் அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததைத் தொடர்ந்து, கோவிலை புனிதப்படுத்தும் பரிகாரப் பூஜை நடத் தப்பட்டது. தலைமை தந்திரி கண்டரூ ராஜீவரு இந்த பரிகாரப் பூஜையை நடத்தினார். இந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்திரியின் செயலுக்கு எதிராக அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில் பிப்ரவரி 12-ஆம் நடைதிறக்கும்போது மீண்டும் சபரிமலைக்கு செல்ல உள்ளதாக பிந்து மற்றும் கனக துர்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்ததாக இரண்டு பெண்களும் சமுதாய புறக்கணிப்பை சந்தித்ததாக தெரிவித்தார். கடைக்காரர்கள் கூட தங்களது கடைக்கு பொருட்களை வாங்க அவர்களை அனுமதிப்பதில்லை என வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com