தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 93 கோடி ரூபாய் சொத்துக்களை வருமானவரித் துறை புலனாய்வு பிரிவு முடக்கி உள்ளது.
பினாமி ஒழிப்பு சட்டத்தின் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்தியா முழுவதும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் பினாமி ஒழிப்பு சட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. அச்சட்டத்தின்படி தமிழகம், புதுச்சேரியில் அதிக அளவு சொத்து வைத்துள்ள 66 பேரை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு பட்டியலிட்டுள்ளது. பினாமி சட்டத்தின் கீழ் ஜூன் 20 ம் தேதி வரை தமிழகத்தில் 93 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 பேரின் சொத்துக்களை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முடக்கி உள்ளது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் 477 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளதாக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.