அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா

அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா

அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா

அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை விதிக்கக் கோரும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளர்காலக் கூட்டத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில் இன்று 85 தனிநபர் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை விதிக்கக் கோரும் மசோதாவை பாஜக எம்.பி பர்வேஷ் சஹிப் சிங் தாக்கல் செய்தார். 

இதுதொடர்பாக, எம்.பி. பர்வேஷ் பேசுகையில், “அசைவ உணவ உட்கொள்வது என்று உயிரினங்களுக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதே காரணத்தை கூறி ஜெர்மனி நாட்டிலும் இந்த நடைமுறை அறிமுகப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் அசைவ உணவை குறைத்துக் கொள்வது பருவநிலை மாற்றத்திற்கு உகுந்ததாக இருக்கும் என்று ஐ.நா சுற்றுச் சூழல் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு, பசுக்களின் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வலியுறுத்தி பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே மசோதா தாக்கல் செய்துள்ளார். எல்.ஜி.பி.டி பிரிவினருக்கு முப்படைகளில் சம உரிமையும், வாய்ப்பும் அளிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரக் கோரி மற்றொரு பாஜக எம்.பி ஜக்தம்பிகா பால் மசோதா தாக்கல் செய்தார். 

பிச்சையெடுப்பதை ஒழிக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் வலியுறுத்தி சிவசேனா எம்.பி சிவாஜி அதல்ராவ் பட்டீல் மசோதா தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எம்பியுமான சசி தரூர் இலக்கிய சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் மசோதா தாக்கல் செய்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com