கன்னையாகுமார்
கன்னையாகுமார் முகநூல்

பீகார்|காங்கிரஸ் நிர்வாகி வந்துசென்றபின் கழுவப்பட்டதா கோயில்? வெளியான வீடியோ!

காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கன்னையாகுமார், பீகாரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
Published on

பீகாரில் காங்கிரஸ் நிர்வாகி கன்னையாகுமார் வந்து சென்ற கோயில் கழுவப்பட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கன்னையாகுமார், பிஹாரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அதன்ஒருபகுதியாக, பங்கான் கிராமத்திலுள்ள துர்கை கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசிய நிலையில், கோயிலிருந்து கிளம்பியுள்ளார். இதனையடுத்து, கோயிலிருந்து அவர் சென்ற பிறகு இளைஞர்கள் சிலர் கங்காஜலம் தெளித்து கோயிலை கழுவியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வைரலானது.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கியான் ரஞ்சன் குப்தா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே பக்தியுள்ளவர்களா?.. மீதமுள்ளவர்கள் தீண்டத்தகாதவர்களா?... என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

பாஜக அல்லாத கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் தீவிர சமஸ்கிருதமயமாக்கலின் ஒரு புதிய கட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோமா ? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னையாகுமார்
Headines| தமிழ்நாட்டின் வரிப்பகிர்வு குறித்த தகவல்கள் வரை தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் வரை!

ஆனால், இதனை மறுத்துள்ள பாஜகவோ, ”முதலில் வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்ய வேண்டும். கழுவியவர்களின் அடையாளத்தை நாம் முதலில் சரிபார்க்க வேண்டும்.  அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கன்னையாகுமாரின் அரசியல் நிராகரிக்கப்பட்டதையே அது காட்டுகிறது. “ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com