வேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்

வேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்

வேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்
Published on

மாற்று சாதியை சேர்ந்த ஆணுடன் சென்றதால் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் தாக்கிய சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 117 கி.மீ தொலைவில் உள்ளது நவடா மாவட்டம். இங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் வேறு சாதி ஆணுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு ஓடியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த இளம்பெணை அவரது பெற்றோர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே  அழைத்து  வந்துள்ளனர்.

இதனிடையே வேறு சாதியை சேர்ந்த ஒருவருடன் சென்ற காரணத்தினால் ஊர் பஞ்சாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் மரத்தில் கட்டி வைத்து அப்பெண்ணை அடித்து துவைத்துள்ளனர். அப்பெண் அரைகுறை நினைவிற்கு செல்லும் வகையில் அடித்துள்ளனர். முடியை பிடித்தும் தரையில் தரதரவென இழுத்துள்ளனர். இதனை சுற்றி நிற்கும் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

இதனிடையே தன்னுடைய ஜாதியை சேர்ந்த ஒரு நபர் தன் மகளுக்கு கணவராக வர வேண்டும் என அப்பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். நாகரிகம் எவ்வளவோ வளர்ந்தபோதிலும், கல்வியறிவு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்த இக்காலத்திலும் இது போன்ற கொடுமைகள் நடைபெறுவது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com