பீகார் முதியவர்
பீகார் முதியவர்எக்ஸ் தளம்

கர்வா சவுத்| நடிகை மியா கலிஃபா புகைப்படத்தை வைத்து விரதத்தை முடித்த முதியவர்.. கிளம்பிய எதிர்ப்பு!

பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கர்வா சவுத் விரதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
Published on

வட இந்தியாவில் பெரும்பாலும் பல மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மணமான இந்துப் பெண்கள் விரதமிருந்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இதற்காக அவர்கள், சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம்வரை விரதம் இருப்பார்கள். பின் அந்த நாளின் இறுதியில் சல்லடை வழியாக நிலவு மற்றும் தங்கள் கணவரின் முகத்தைப் பார்த்தபிறகு, நோன்பை நிறைவுசெய்வர். இதன்மூலம், தனது கணவர்களின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புகின்றனர். அந்தப் பண்டிகை கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கர்வா சவுத் விரதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி விரதம் இருப்பதற்குப் பதிலாக, நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இத்தகைய செயல்கள் இந்து பண்டிகை மற்றும் அதன் சடங்குகளை அவமதிப்பதாக உள்ளது என்று சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மான் வேட்டை வழக்கு|”சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும்” - எச்சரிக்கை விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் உறவினர்

பீகார் முதியவர்
கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.. உபியில் அரங்கேறிய சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com