முதலில் 15 மாணவர்கள், பிறகு பிரின்சிபல், ஆசிரியர்கள்... கதறும் சிறுமியின் கண்ணீர் கதை!
பள்ளி மாணவியை மிரட்டி 18 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தின் சப்ராவில் உள்ளது தீபேஷ்வர் கியான் நிகேதன் பள்ளி. இங்கு 9-ம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏழு மாதத்துக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் கதறி அழுத சிறுமி, சிறைக்குச் சென்ற பின், கடந்த ஏழு மாதங்களில் 18 பேர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை விசாரித்தார்.
முதலில், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துள்ளான். அதை மற்ற நண்பர்க ளுக்கு அனுப்பியுள்ளான். அதைப் பார்த்த அவர்களும், ’இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால்...’ என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வீடியோ பிரின்சிபலுக்கும் சென்றது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவரும் உடன் பணியாற் றிய மேலும் இரு ஆசிரியர்களும் சேர்த்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் அந்த வீடியோ அப்படியே மற்ற மாணவர்களுக்கும் பரவி மொத்தம் 18 பேர் அந்தச் சிறுமியை சீரழித்துள்ளனர். செய்வதறியாது திகைத்த அந்தச் சிறுமி இதை யாரிடம் சொல்வது என்று தினமும் தவித்திருக்கிறார்.
இதைக் கேட்டு கொதித்துப் போன அவளின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலதி காரியிடம் சென்று புகார் கொடுக்கப் போவதாகக் கூறிய பின் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமி, யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று விசாரணையில் ஒப்பித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரின்சிபல் மற்றும் 2 ஆசிரியர் கள் கைது செய்யப்பட்டனர். 2 மாணவர்களையும் பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அந்தச் சிறுமியை மருத்துவ பரிசோத னைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பள்ளியின் பிரின்சிபலும் ஆசிரியர்களும் சேர்ந்தே சிறுமியை சீரழித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.