நள்ளிரவிலும் எண்ணப்படும் வாக்குகள் - தாமதமாகும் பீகார் தேர்தல் முடிவுகள்

நள்ளிரவிலும் எண்ணப்படும் வாக்குகள் - தாமதமாகும் பீகார் தேர்தல் முடிவுகள்
நள்ளிரவிலும் எண்ணப்படும் வாக்குகள் - தாமதமாகும் பீகார் தேர்தல் முடிவுகள்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், இரவிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பீகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி முன்னிலை பெற்றது. பின்னர் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி முன்னிலை வகித்தது. பிற்பகல் வரை பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட, கூடுதலான இடங்களில் முன்னிலையில் இருந்தது.

மாலையில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சிக்கு ஆர்.ஜே.டி. மற்றும் பாஜக இடையே கடும் போட்டி உள்ளது. கொரோனா விதிகள் அமலில் இருப்பதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகி வருகின்றன. இதனிடையே பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவசரம் காட்ட வேண்டாம் என தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ‌‌தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர காலை ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 215 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 66 இடங்களிலும் பாஜக 64 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் 34 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 123 இடங்களிலும், ராஷ்டிர ஜனதா தளத்தின் மெகா கூட்டணி 113 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்க நள்ளிரவுக்கு மேல் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு விபரங்கள் பின்வருமாறு: 

ஆர்.ஜே.டி கூட்டணி (111)

ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 66

காங்கிரஸ் கட்சி - 17
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
சிபிஎல் ( எம்.எல்) -10 

-------- 

ஜே.டி.யூ (124) 

பாரதிய ஜனதா கட்சி - 64
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி - 4
ஐக்கிய ஜனதா தளம் - 38
விகாஷீல் இன்சான் கட்சி - 4 

----------

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் - 5
எல்.ஜே.பி - 1
மற்றவை -7

தேர்தல் முடிவுகளை காண இங்கே க்ளீக் செய்யவும்...(தேர்தல் ஆணையத்தின் இணைய தளப்பகுதி)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com