மது விலக்கால் மாறிப்போன பீகார்? சிறந்த முன்னுதாரணம்!

மது விலக்கால் மாறிப்போன பீகார்? சிறந்த முன்னுதாரணம்!

மது விலக்கால் மாறிப்போன பீகார்? சிறந்த முன்னுதாரணம்!
Published on

பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். பீகாரில் ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் மதுவிலக்கு அமலான 6 மாத காலத்தில் அம்மாநில பாதுகாப்பு, பதிவான குற்றச்செயல்கள், விற்பனையான பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு ஆடைகள் மற்றும் உணவு பொருட்கள் அதிகளவில் வாங்க முடிந்ததாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் விலை உயர்ந்த சேலைகளின் விற்பனை 1700 சதவிகிதம், விலை உயர்ந்த துணிகளின் விற்பனை 910 சதவிகிதம், தேன் விற்பனை 380 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

மதுவிலக்கு அமலுக்கு பிறகு குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளது. கடத்தல் சம்பவங்கள் 66.6 சதவிகிதம் குறைந்துள்ளது. கொலை வழக்குகள் 28.3 சதவிகிதமாக குறைந்தது தெரியவந்துள்ளது. 19 சதவீதம் பேர் புதிய சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com