Bihar Assembly Elections updates
bihar election x page

பிகார் முதல்கட்ட தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி, 27.65% வாக்குப்பதிவு!

பிகார் முதல்கட்ட தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, 27.65% வாக்குப் பதிவாகியுள்ளது.
Published on
Summary

பிகார் முதல்கட்ட தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, 27.65% வாக்குப் பதிவாகியுள்ளது.

234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி, 27.65% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 30.37% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் காலை 11:00 மணி வரை 23.71% மெதுவான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Bihar Assembly Elections updates
bihar electionx page

முன்னதாக, காலை 9 மணிக்கு மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்ட லக்கிசராய் தொகுதியில், 11:00 மணி நிலவரப்படி 30.32% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 30.04%, பக்சரில் 28.02%, போஜ்பூரில் 26.76%, தர்பங்காவில் 26.07%, ககாரியாவில் 28.96%, மாதேபுராவில் 28.46%, முங்கர்பூரில் 26.68%, முங்கர்பூரில் 29.668% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாளந்தாவில் 26.86%, சஹர்சாவில் 29.68%, சமஸ்திபூரில் 27.92%, சரனில் 28.52%, ஷேக்புராவில் 26.04%, சிவனில் 27.09% மற்றும் வைஷாலியில் 28.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது, காலையிலேயே ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், தனது தந்தை லாலு பிரசாத் உட்பட அவரது குடும்பத்தினருடன் சென்று பாட்னாவில் வாக்களித்தார். ககாரியாவில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வாக்களித்தார். லக்கிசராய் தொகுதியில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவும், பாட்னா தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கும் வாக்களித்தனர்.

Bihar Assembly Elections updates
பிகார் முதற்கட்ட தேர்தல்.. தொடங்கிய வாக்குப்பதிவு.. களம் காணும் 1,314 வேட்பாளர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com