பொதுவெளியில் மலம் கழித்தால் ஃபோட்டோ எடுங்கள்: ஆசிரியர்களுக்கு பீகார் அரசு உத்தரவு

பொதுவெளியில் மலம் கழித்தால் ஃபோட்டோ எடுங்கள்: ஆசிரியர்களுக்கு பீகார் அரசு உத்தரவு

பொதுவெளியில் மலம் கழித்தால் ஃபோட்டோ எடுங்கள்: ஆசிரியர்களுக்கு பீகார் அரசு உத்தரவு
Published on

பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை புகைப்படம் எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவுரங்காபாத் மற்றும் முஸாபர்புர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு இந்த உத்தரவு பீகார் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத் மற்றும் முஸாபர்புர் மாவட்டங்களில் பொதுவழியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் காலை 5 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஷிப்ட் அடிப்படையில் புகைப்படம் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் புகைப்படம் எடுக்கும்பணியை மேற்பார்வையிட பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோன்று புகைப்படம் எடுத்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளை புகைப்படும் எடுத்தால் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இது எங்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பீகாரில் ஆசியர்களுக்கு தற்போது பாடம் எடுப்பது தவிர மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com