பாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி

பாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி
பாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. 

பீகார் மாநிலம் சந்தர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தோழியும், சக மாணவியும் ஆன சோனம் என்பவர் அந்தச் மாணவியை தனக்கு தெரிந்தவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு தன்னைப்போன்று சில மாணவிகள் இருப்பதாகவும், அவர்களுடன் சேர்ந்து துர்கா பூஜையில் ஈடுபடலாம் என்றும் பொய் கூறி சோனம் கூட்டிச்சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றதும் சில இளைஞர்கள் குடித்துவிட்டு இருப்பதை கண்ட மாணவி, அங்கிருந்து திரும்பிச்செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞர்கள் மாணவிக்கு கட்டாயமாக மதுவைக்கொடுத்து குடிக்கவைத்துள்ளனர். அவர் குடிக்க மறுக்கவே கட்டாயமாக வாயில் ஊற்றியுள்ளனர். பின்னர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இளைஞர்கள் வெளியே செல்லும் வழியை மறிக்க, கட்டத்தின் மாடிக்கு மாணவி சென்றுள்ளார். அங்கும் அந்த இளைஞர்கள் வந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததால், வேறு வழியின்றி அந்த மாணவி அங்கிருந்து தாவிக்குதித்துள்ளார்.

கீழே விழுந்த மாணவி, அந்த வழியாக செல்லும் மின்கம்பியில் உரசி தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மாணவி சுயநினைவை இழந்து, கோமா நிலைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவியின் தோழி மற்றும் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் மாணவிக்கு நினைவு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com