தரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’

தரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’
தரையில் பயணிக்கும் ஹெலிகாப்டர் - பீகார் இளைஞரின் ‘வேற லெவல்’

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ளார். 

பீகார் மாநிலம் சிமாரி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மிதிலேஷ். இவருடைய கார் செல்பவர்களை எல்லாம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவருடைய கார் சாலையில் சென்றால் ஒரு சிறிய ஹெலிகாப்டரே சாலையில் செல்வது போல இருக்கிறது. நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மிதிலேஷ். 

மிதிலேஷுக்கு சிறிய வயது முதல் ஹெலிகாப்டர் மீது ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் ஒரு ஹெலிகாப்டரை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் அதற்கான வசதி தன்னிடம் இல்லை என்பதால் குறைந்தபட்சம் ஹெலிகாப்டர் வடிவிலாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்த மிதிலேஷ், தன்னுடைய சகோதரன் உதவியுடன் நானோ காரை 7 லட்ச ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார். விசிறிகள், எல்இடி விளக்குகள் என ஹெலிகாப்டர் கார் உருவாக்க இவர் 7 மாத காலத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள மிதிலேஷ், எனக்கு சிறிய வயது முதல் ஹெலிகாப்டரை உருவாக்கி பறக்க வேண்டுமென ஆசை. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. அதனால் நான் ஹெலிகாப்டர் கார் உருவாக்கினேன் என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com