‘எப்படியாவது பாஸ் பண்ணிவிடுங்க; இல்லனா கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க’ - விடைத்தாளில் மாணவி உருக்கம்!

பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விடைத்தாளில் பீகார் மாணவியின் உருக்கமான கடிதம்
விடைத்தாளில் பீகார் மாணவியின் உருக்கமான கடிதம்முகநூல்

தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் தெரியாதபட்சத்தில், விடைத்தாளில் வித்தியாச வித்தியாசமான நூதன கோரிக்கைகளை முன்வைக்கும் மாணவர்கள் நம்மில் ஏராளம். ஆனால் அதுவே அதிர்ச்சியான, உருக்கமான ஒரு கோரிக்கையாக இருந்தால்...? அப்படியொரு நிகழ்வுதான் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகாரில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கிய 10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி அங்கு நடந்துவருகிறது.

பீகார் பொதுத் தேர்வு
பீகார் பொதுத் தேர்வுமாதிரிப்படம்

செய்முறை தேர்வு, எழுத்து தேர்வு என இரண்டு வகை தேர்வுமே முடிவடைந்துவிட்டதால், தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணிகள் பீகாரில் நடைப்பெற்று வருகின்றன. அப்படியான ஒரு விடைத்தாள் ஒன்றில், 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் முன்வைத்துள்ள கோரிக்கையொன்று தற்போது அனைவரின் கவனத்தினையும் பெற்றுள்ளது.

அந்த விடைத்தாளில் அவர், “என் அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில்தான் வருமானம் கிடைக்கும். இதனால், எனது கல்வி செலவை அவரால் சுமக்க முடியாத நிலை உள்ளது. இதனால் என்னை மேற்கொண்டு படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. பண நெருக்கடியால் படிப்பினை கைவிடும்படி தொடர்ந்து கூறி வருகிறார். இதை எல்லாம் மீறிதான் என் படிப்பை நான் தொடர்ந்து வருகிறேன்.

இந்த தேர்வில் நான் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்றால், எனக்கு திருமணம் செய்துவைத்து விடுவேன் என்று கூறியுள்ளார் என் தந்தை. நான் ஏழ்மையான குடும்பத்தினை சேர்ந்தவள். எனவே எனக்கு நல்ல மதிப்பெண் வழங்கி என் எதிர்காலத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விடைத்தாளில் பீகார் மாணவியின் உருக்கமான கடிதம்
“வேலைவாய்ப்பு யார் தருவது?” - சிஏஏ சட்டத்தை எதிர்த்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ!

இந்த விடைத்தாளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாணவியின் உண்மைநிலையை அரசு விரைந்து அறிந்து, அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மாணவியின் குற்றச்சாட்டு உண்மையெனில், குழந்தை திருமணம் மற்றும் கட்டாய திருமணத்திலிருந்து அவரை காக்கவேண்டும் என்றும் மேற்கொண்டு அவரது கல்விக்கு அரசே உதவவேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com