பீகார்: 20 ரூபாய் பான்பராக் கடனாக கொடுக்க மறுத்த கடைக்காரர் சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்திலுள்ள திரிவேனிகஞ்ச் பகுதியில், திங்கள்கிழமை மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் ரூ .20 மதிப்புள்ள பான் மசாலாவை கடனாக வழங்க மறுத்ததற்காக ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் அஜித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது, சுட்டுக்கொல்லப்பட்ட கடை உரிமையாளரின் பெயர் மிதிலேஷ் எனவும் அடையாளம் காணப்பட்டது.
அஜித் குமார், கடை உரிமையாளரான மிதிலேஷின் தந்தையுடன் முந்தைய நாள் செய்ததைப் போலவே, கடைக்காரர் மிதிலேஷ் குமாருடன் அடுத்த நாளும் கடன் கேட்டு சண்டையிட்டுள்ளார். மிதிலேஷ் மீண்டும் பான் மசாலாவை கடன் கொடுக்க மறுத்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டார், எவ்வாறாயினும், காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்வதற்காக ஒரு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.