குழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை!
குழந்தையை கடத்திக் கொன்றதாக பெண் ஒருவர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள பெல்கச்சி பகுதியை சேர்ந்தவர் சுபோத் சவுகான். இவரது 10 வயது மகன் பிரபாத் குமாரை திங்கட்கிழமை இரவு காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் தேடினர். எங்கும் காணவில்லை. இந்நிலையில் மறுநாள் சிறுவனின் உடல் வீட்டுக்கு சிறிது தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த சஜ்னி தேவி (36) என்பவர் கொன்றதாக ஊருக்குள் சந்தேகம் கிளம்பியது.
அதாவது, சிறுவனின் தந்தைக்கும் சஜ்னிக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தன் மகனை என்றாவது ஒரு நாள் சஜ்னி கொன்று விடுவார் என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார், சிறுவனின் தாய் சாந்தி தேவி. இந்நிலையில் சிறுவன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவனை சஜ்னிதான் கொன்றிருப்பார் என்று அவர் கூறியுள் ளார்.
இதையடுத்து சாந்தினிக்கு ஆதரவாகத் திரண்ட கிராமத்தினர், சஜ்னியை கடுமையாகத் தாக்கி, பின்னர் உயிரோடு எரித்துள்ள னர். அவர் கதறியபடி அங்கும் இங்கும் ஓடினார். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. இதனால் அவர் உடல் கருகி உயிரிழந் தார். தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தன் மகனை சஜ்னியும் அவர் உறவினர்களும் சேர்ந்து கொன்றதாக, சுபோத் கொடுத்த புகாரை அடுத்து அது தொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.