\
ரயில் நிலையத்திற்கு தீ வைத்து அதிகாரிகளைக் கடத்திய மாவோயிஸ்ட்கள்

ரயில் நிலையத்திற்கு தீ வைத்து அதிகாரிகளைக் கடத்திய மாவோயிஸ்ட்கள்

ரயில் நிலையத்திற்கு தீ வைத்து அதிகாரிகளைக் கடத்திய மாவோயிஸ்ட்கள்
Published on

பீகாரில் ரயில் நிலையத்தை தீ வைத்து கொளுத்திய மாவோயிஸ்ட்கள், 2 அதிகாரிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் மசுதன் என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்டுகள், ரயில் நிலையத்திற்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து ரயில் நிலையத்தின் துணை மேலாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரியும் கடத்திச் சென்றனர். மசுதன் வழியாக ரயில்களை இயக்கினால், பணயக் கைதிகளாக உள்ள அதிகாரிகள் இருவரையும் கொல்லப்போவதாக மாவோயிஸ்ட்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com