"நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான்" உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் ஒருவர் விலகல்

"நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான்" உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் ஒருவர் விலகல்
"நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான்" உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் ஒருவர் விலகல்

“நான் எப்போதும் விவசாயிகளின் பக்கம்தான் நிற்பேன்” - வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து விலகிய பூபேந்தர் சிங் மான்!

மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லையில் நாடு முழுவதும் இருந்தும் திரண்ட விவசாயிகள் சுமார் 45 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதே நேரத்தில் விவசாயிகளுடன் பேசி சுமூக தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அண்மையில் அமைத்தது.

இந்நிலையில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பியுமான பூபேந்தர் சிங் மான் அந்த குழுவிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அவரே எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசி சுமூக தீர்வு காண்பதற்கான 4 பேர் கொண்ட குழுவில் என்னை நியமித்தமைக்கு உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.


விவசாயக சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்யாமல் இருக்க எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஏனெனில் நான் எப்போதும் விவசாயிகளின் பக்கம்” என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com