சத்தீஷ்கர்: இளைஞரை தாக்கிய ஆட்சியரை நீக்க முதல்வர் பூபேஷ்பாகேல் உத்தரவு

சத்தீஷ்கர்: இளைஞரை தாக்கிய ஆட்சியரை நீக்க முதல்வர் பூபேஷ்பாகேல் உத்தரவு
சத்தீஷ்கர்: இளைஞரை தாக்கிய ஆட்சியரை நீக்க முதல்வர் பூபேஷ்பாகேல் உத்தரவு

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா ஒருவரை அறைந்த வீடியோ வைரலாகி வந்ததை அடுத்து, அந்த ஆட்சியரை உடனடியாக நீக்க சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பூபேஷ் பாகேல் வெளியிட்ட ட்வீட்டில் , " ஆட்சியரின் இந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. சத்தீஸ்கரில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் பொறுத்துக் கொள்ளப்படாது. இந்த சம்பவத்திற்காக நான் அந்த இளைஞனிடமும், அவரது குடும்பத்தினருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக சத்தீஷ்கரில் மருந்து வாங்கச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரும் காவலர்களும் தாக்கும் வீடியோ வெளியாகியது. சுராஜ்பூரில் அந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, இளைஞரின் செல்போனைக் கேட்டுள்ளார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் எதிர்பாராத விதமாக ஆவேசமாக தரையில் எறிந்து சேதப்படுத்துகிறார் ஆட்சியர். மருந்து சீட்டை இளைஞர் காண்பித்தும் ஆட்சியர் ஏற்காமல் காவலர்களை அழைத்து இளைஞரை கவனிக்கச் சொன்னதும், லத்தியால் இளைஞரை காவலர்கள் தாக்குகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறையினர், சாலை விதிமீறி வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகக் கூறி இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com