ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு
Published on

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்துள்ளார். 

புவனேஷ்வரில் உள்ள நவீன் பட்நாயக் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அரசியல் மற்றும் அரசியல் தாண்டிய விஷயங்களையும் இருவரும் கலந்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நவீன் பட்நாயக்கிற்கு அசோக சக்கரத்தை கமல் நினைவு பரிசாக அளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “அடிப்படையில், இது அரசியல் தலைவரிடம் அறிவுரை கேட்கும் வகையிலான உரையாடல்தான். நான் கேள்விகளை கேட்டேன். அவர் அதற்கு சிறப்பான விளக்கங்களை அளித்தார். பிஜூ ஜனதா தளம் உடனான கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள். அவரிடம் இருந்து ஆலோசனையைத்தான் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், அவரது அரசியலை உற்று நோக்கி வருகிறோம். இந்த சந்திப்பில் மகிழ்ச்சி” என்றார்.

கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் நாளை கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அதனை, முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com