போபால்: 49 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த 103 வயது முதியவர்.. இதுதான் காரணமா?

103 வயதில் முதியவர் ஒருவர், 3-வது திருமணம் செய்ததது குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
போபால் ஹபிப் நாசர்
போபால் ஹபிப் நாசர்ட்விட்டர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயது நிரம்பிய இந்த முதியவர், ஒரு சுதந்திர போராட்ட வீரர். இவர் முதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாசிக் பகுதி பெண்ணை மணமுடித்துள்ளார். அவர் இறந்ததைத் தொடர்ந்து அடுத்து, 2-வது முறையாக உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்துள்ளார். அவரும் இறந்துவிட்டார். இரண்டு மனைவிகளும் காலமான நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இது, அவருகு மிகுந்த கவலையைத் தந்துள்ளது. தன்னைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாததை உணர்ந்த அவர், தற்போது 3-வது திருமணம் செய்துள்ளார். அவர், 49 வயது நிரம்பிய ஃபிரோஸ் ஜகான் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபிரோஸ் ஜகானும் தனது கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். ஹபிப் நாசரைப் பராமரிக்க யாரும் இல்லாததை அறிந்தே இந்த திருமணத்திற்கு ஃபிரோஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஹபீப் நாசரை திருமணம் செய்துகொண்டது குறித்து ஃபிரோஸ் ஜஹான், ”இது என்னுடைய சொந்த முடிவு. அவரைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை. என் கணவர் முற்றிலும் நலமாக இருக்கிறார், மருத்துவப் பிரச்னைகள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

3வது திருமணம் செய்துகொண்டது குறித்து ஹபீப் நாசர், "எனது மனைவிகள் இறந்தபிறகு நான் வேறு உலகத்திற்குச் சென்றுவிட்டேன், நான் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால்தான் நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com