modipm office
இந்தியா
பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!
பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது குறித்து எழுந்த கேள்விக்கு ஜே.பி. நட்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
Summary
பாரத ரத்னா விருது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, மோடிக்கு விருது வழங்குவது பற்றி பாஜக விவாதிக்கவில்லை என்று கூறினார்.
பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது குறித்து பாஜகவில் இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
JP Naddaani
இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மோடி சர்வாதிகாரி போல செயல்படுவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி உலகின் மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர் என்றும் நட்டா புகழாரம் சூட்டினார்.

