பசு வதைக்கு எதிராக தேசிய அளவிலான சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாவீர் ஜெயந்தியையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், பசுக்களை பாதுகாக்கும் செயலை தொடர வேண்டும் எனவும் அந்த பணியில் ஈடுபட்டிருப்போர் சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது அந்த நோக்கத்தையே குலைப்பதாக அமைந்துவிடும் என கூறி இருக்கும் மோகன் பகவத், பசுவதைக்கு எதிராக நாடு தழுவிய சட்டம் தேவை என தெரிவித்துள்ளார். பசு பாதுகாப்பு இயக்கத்தினரை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.