\
எப்போது பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான்?

எப்போது பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான்?

எப்போது பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான்?
Published on: 

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் வரும் 16 ஆம் தேதி பதவியேற்கிறார்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பகவந்த் மான் டெல்லி முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சண்டிகரில் நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பகவந்த் மான் சட்டப்பேரவை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோருகிறார். வரும் 16 ஆம் தேதி பகத்சிங் பிறந்த கட்கர் கலானில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com