படுக்கைக்கே சென்று உணவு கொடுக்கும் - ரோபோவை களம் இறக்கிய பெங்களூரு மருத்துவமனை!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மாத்திரைகளை வழங்க பெங்களூரு மருத்துவமனை ரோபோவை களம் இறக்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும், செவிலியர்களும் கூட பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற சேவைகளின் போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெங்களூரு மருத்துவமனை ரோபோவை களம் இறக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விக்டோரியா மருத்துவமனையில் இந்த வகை ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கைக்கு சென்று உணவு மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கும். இதனால் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்