”எனது 12 வயது மகனை பலி கொடுத்துவிட்டேன்” - பாதுகாப்பான சுற்றுலாவுக்காக போராடும் தந்தை!

”எனது 12 வயது மகனை பலி கொடுத்துவிட்டேன்” - பாதுகாப்பான சுற்றுலாவுக்காக போராடும் தந்தை!
”எனது 12 வயது மகனை பலி கொடுத்துவிட்டேன்” - பாதுகாப்பான சுற்றுலாவுக்காக போராடும் தந்தை!

தனது 12 வயது மகன் 2021 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிரில் பாராகிளைடிங்கில் பங்கேற்றபோது உயிரிழந்தததை சுட்டிக்காடி பெங்களூரைச் சேர்ந்த அவனது தந்தை ரிஷப் திரிபாதி பாதுகாப்பான சுற்றுலா வேண்டுமென அரசுக்கு மனு அளித்துள்ளார்.

பாராகிளைடிங், படகு பயணம் போன்ற சாகச விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை விதித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு அவர் மத்திய, மாநில அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

மேலும், இதுபோன்ற சாகச விளையாட்டுகள் நடத்தப்படும் இடங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி வசதிகள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com