நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது!

நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது!
நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது!

விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பெங்களூரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையும் வழக்கம் போல இந்த விமானம் இயக்கப்பட்டது. அப்போது விமானத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா (28) என்ற இளைஞ ரும் ஏறினார். 

அவருடைய இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, 20 வயது விமானப் பணிப்பெண் ஒருவர் அவர் இருக்கையைக் கடந்து சென்றார். அப்போது திடீரென்று பணிப்பெண்ணின் பின் பக்கத்தை பிடித்து அழுத்தினாராம் ராஜூ. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரைக் கண்டித்தார். ஆனால், ராஜூ அவரை ஆபாசமாகத் திட்டினாராம். 

அந்த விமானப் பணிப்பெண் இதுபற்றி தனது சக ஊழியர்களிடம் தெரிவித்தார். விமானம் மும்பையில் தரையிறங்கியதும் விமான நிலையை போலீஸிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ராஜூவை கைது செய்த போலீசார்  நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com