இலவச குடிநீர் வழங்க வேண்டும்..... பெங்களூரு மால்களுக்கு அதிரடி உத்தரவு
வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் உத்தரவைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு யஷ்வந்த்பூர் மால் ஒன்றில் உள்ள உணவகத்தில் இலவசமாக குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து பெங்களூரு மாவட்ட நகர நுகர்வோர் குறைதீர் மையத்தில் சுதா கட்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், வணிக வளாகங்கள் மற்றும் தனியாக செயல்படும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.