பெங்களூரு குண்டுவெடிப்புக்கு முன்பு பஸ்ஸில் பயணித்த மர்ம நபர்.. உறுதிசெய்த என்.ஐ.ஏ.. வைரல் வீடியோ!

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு, குண்டுவைக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் மர்ம நபர், கர்நாடகப் பேருந்தில் ஏறிப் பயணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மர்மநபரின் புகைப்படம்
மர்மநபரின் புகைப்படம்ட்விட்டர்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு, குண்டுவைக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் மர்ம நபர், கர்நாடகப் பேருந்தில் ஏறிப் பயணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கில் சந்தேகப்படும் நபர் மார்ச் 1ஆம் தேதி காலை 10.45 மணியளவில், ராமேஸ்வரம் கபேயில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கியுள்ளார்.

அடுத்து சரியாக, 11.34 மணிக்கு அந்த நபர் ராமேஸ்வரம் கபேக்குள் நுழைகிறார். பின் 11.43 மணியளவில் கபேயில் இருந்து வெளியேறி, 1 கிலோ மீட்டருக்கு மேல் நடந்துசென்று, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்துள்ளார். பின்பு, அங்கிருந்த பொதுப் பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. சந்தேக நபரின் சிசிடிவி தடயங்கள், கபேயில் மதியம் 12.56 மணிக்கு குண்டுவெடிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர் வந்ததிலிருந்து தப்பிச் செல்லும் வரை பதிவாகியுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு, அவர் உடைகள் மாற்றுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

இதில், அவரது முகம் உள்ளிட்ட சில முக்கிய தடங்கள் இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பஸ்ஸில் பயணித்தது அவர்தானா என்பதையும் நடத்துநரிடம் கேட்டு உறுதி செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com