சைபர் கிரைம் கில்லாடிகள்...பெங்களூருக்கு முதலிடம்

சைபர் கிரைம் கில்லாடிகள்...பெங்களூருக்கு முதலிடம்

சைபர் கிரைம் கில்லாடிகள்...பெங்களூருக்கு முதலிடம்
Published on

நாளுக்கு நாள் இணைய வழி பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருவதைப் போலவே இணைய வழி குற்றம் எனப்படும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. நாடெங்கும் நடைபெற்ற சைபர் க்ரைம் குற்றங்களில் பெங்களூரு தான் முதலிடம் பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.

தேசிய குற்ற ஆவண புள்ளி விவரத்தின்படி கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11,491 சைபர் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகப்பட்டச குற்றச் சம்பவங்கள், ஐடி நகரமான பெங்களரூவில்தான் நடைபெற்றிருக்கின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களரூவில் மட்டும் 1,041 சைபர் குற்றச்சம்வங்களும், அதற்கு அடுத்தப்படியாக ஹைதராபாத்தில் 354 குற்ற சம்பவங்களும், கொல்கத்தாவில் 111 குற்றச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது சென்னையில் 29 சைபர் குற்றச் சம்பவங்களே நடைபெற்றிருக்கின்றன.

அதிகரிக்கும் இந்த குற்றச் சம்பவங்களுக்கு மூல காரணமாக யார் இருக்கிறார்..? என்பது தெரியாதததால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை கர்நாடாக உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், தனது புகைப்படங்களை யாரோ மார்பிங் செய்து, அதனை பிரபல சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் என  சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்திருந்தார். இதனைப்போல, கர்நாடகா எம்எல்ஏ யோகேஸ்வர், தனது வங்கி கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் யாரோ ரூ.1,90,000 பணத்தை திருடிவிட்டார் எனது புகார் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com